உருளை வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசிமாவு - 100 கிராம்

மைதா - 100 கிராம்

தேங்காய் - ஒரு மூடி

உருளைக்கிழங்கு - 500 கிராம்

பச்சைமிளகாய் - 5

இஞ்சி - ஒரு துண்டு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லித்தழை - சிறிது

புதினா - சிறிது

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசிமாவு, மைதா மாவு இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காயைத் துருவிக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்றாக மசித்துக் கொண்டு தேங்காய் இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

கலவையை சிறு உருண்டைகளாக வடை போல் தட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் வடைகளை அரிசி, மைதா கரைசலில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: