உருளைக்கிழங்கு வடை (2)
தேவையான பொருட்கள்:
உருளைகிழங்கு - 1/2 கிலோ
பச்சைமிளகாய் - 7
கொத்தமல்லி இலை - சிறிது
எழுமிச்சை பழம் - 1
கடலை மாவு - 1/4 கிலோ
மசாலா தூள் - சிறிது
மஞ்சள்தூள் - சிறிது
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைகிழங்கை வேகவைத்து தோல் எடுத்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
கொத்தமல்லி இலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
எழுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
வேகவைத்த உருளைக்கிழங்குடன் உப்பு,பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,கொத்தமல்லி இலை, எழுமிச்சை சாறு இவற்றை சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும்.
கடலை மாவில் தேவையான அளவு உப்பு,மசாலாதூள்,மஞ்சள்தூள் போட்டு 200 மில்லி தண்ணீரில் நன்கு கலந்துகொள்ளவும்.பின் உருளைகிழங்கு கலவையை உருண்டையாக உருட்டி மாவு கரைசலில் முக்கி எண்ணெய்யை சூடாக்கி பொறித்து எடுத்து பரிமாறவும்.