உருளைக்கிழங்கு போண்டா (2)
தேவையான பொருட்கள்:
கடலைமாவு - 1/2 கிலோ
அரிசிமாவு - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
பச்சைபட்டாணி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 10
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பட்டாணி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு அரிந்து வைத்த வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
அதில் மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கிய பிறகு இறக்கி ஆற விட்டு சிறிய சிறிய உருண்டையாக உருட்டி வைக்கவும்.
பிறகு கடலைமாவு, சோடா உப்பு, அரிசிமாவு, உப்பு அனைத்தையும் பஜ்ஜி மாவு போல் கரைத்து கொள்ள வேண்டும்.
இந்த மாவில் உருட்டிய உருண்டைகளை நனைத்து எண்ணெய்யில் பொரித்து எடுத்து பரிமாறவும்.