உருளைக்கிழங்கு போண்டா
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/3 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்து வைக்கவும்.
வெங்காயம் தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின், உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
ஆறிய பின் எழுமிச்சம் பழம் அளவு உருண்டைகளாக்கி வைக்கவும்.
கடலை மாவு, அரிசி மாவு, ஆப்ப சோடா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பததிற்கு கரைக்கவும்.
உருண்டைகளை மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.