உருளைக்கிழங்கு சிப்ஸ் (அவன் முறை)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 மீடியம் சைஸ்
மிளகாய் தூள் - 1 சிட்டிகை
தேவைக்குமஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி நீளவாட்டில் மெல்லிய சிப்ஸாக நறுக்கி வைக்கவும்.
இவற்றை ஒரு மெல்லிய துணி அல்லது டிஷூ பேப்பரில் போட்டு வெளி வரும் நிரை லேசாக அழுத்தி எடுத்து விடவும்.
அவனை 200 C’ல் முற்சூடு செய்யவும்.
ஒரு தட்டில் மிளகாய், மஞ்சள், உப்பு கலந்து அதில் எண்ணெய் விட்டு குழைத்து கொண்டு அதில் இந்த சிப்ஸ் அனைத்தையும் போட்டு பிரட்டி விடவும்.
ஒன்று போல் கலந்து விட வேண்டும். கடைசியாக கறிவேப்பிலையும் சேர்த்து பிரட்டவும்.
அவன் ட்ரேவில் அலுமினியம் ஃபாயில் போட்டு அதில் ஒட்டாமல் இருக்க லேசாக எண்ணெய் தடவி வைக்கவும். அல்லது நான்-ஸ்டிக் அவன் பாத்திரமும் பயன்படுத்தலாம்.
மசாலாவில் பிரட்டிய சிப்ஸை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனி தனியாக இருக்கும்படி ட்ரேவில் வைக்கவும்.
இப்போது இதை அவனில் வைத்து 15 - 20 நிமிடம் வரை ஃப்ரை செய்யவும்.