உருளைக்கிழங்கு சமோசா
தேவையான பொருட்கள்:
மாவு பிசைய:
கோதுமை மாவு (அல்லது) மைதா மாவு - 1 கப்
கோதுமை ரவை - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மசாலா தயாரிக்க:
உருளைக்கிழங்கு (பெரியது) - 2
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பற்கள்
சோம்பு - சிறிது
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - 2 இணுக்கு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைக்கவும். இஞ்சி மற்றும் பூணடை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை மாவுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்புச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, (சோம்பிற்கு பதிலாக கடுகு, கடலைப்பருப்பும் தாளிக்கலாம்). வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.
மசாலா உருளைக்கிழங்குடன் நன்றாகச் சேரும்படி கிளறிவிட்டு இறக்கி வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சப்பாத்திகளாக தேய்த்து, சமோசா அச்சினுள் வைத்து அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.
பிறகு சமோசா அச்சினை மூடி அதன் வெளிப்புறத்திலிருக்கும் மாவை நீக்கிவிட்டு, அச்சினைத் திறந்து சமோசாவை வெளியே எடுத்து வைக்கவும்.
இதே முறையில் மீதமுள்ள மாவிலும் சமோசாக்களைத் தயார் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
குறிப்புகள்:
மிகவும் எளிதாகச் செய்யக் கூடிய சமோசா தயார், மாலை நேர டீயுடன் சாப்பிட.