உருளைக்கிழங்கு காராச்சேவு செய்முறை
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
அரிசிமாவு - 1/4 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை மண்போகக்கழுவி வேகவைத்து தோல் நீக்கி அதனுடன் உப்பு,காரப்பொடி, பெருங்காயப்பொடி, நெய்,அரிசிமாவு, கடலைமாவு எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாகப்பிசைந்து கொள்ளவும்.
ஒருவாணலியில் எண்ணைவத்து, காய்ந்ததும், பிசைந்துவைத்திருக்கும் மாவுக்கலவையை ஒரு காராச்சேவு கரண்டியில் போட்டு எண்ணைக்கு நேராகப்பிடித்துக்கொண்டு, உள்ளங்கையால் தேய்க்கவும்.
நன்குவெந்து, ப்ரௌன் கலர் வந்ததும் எடுத்து வடிகட்டியில் போடவும். இதே போல் எல்லா மாவையும் சுட்டு எடுக்கவும்.