உதிரி பக்கோடா
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 2
வத்தல் - 6
பூண்டு - 10 பல்
கருவேப்பிலை - சிறிது
நச்சீரகம் - சிறிது
நெய் - 2 மேசைக்கரண்டி
சோடா உப்பு - சிறிது
முந்திரி பருப்பு - 10
கடலை எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடலைமாவில் உப்பு, சோடா உப்பு சேர்த்து வைக்கவும்.பின் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் இரண்டாக நறுக்கி போடவும்.
பின் அம்மியில் வத்தல், நச்சீரகம், தோல் நீக்காத பூண்டு, தோல் நீக்காத மீதி உள்ள 4 அல்லது 5 வெங்காயம், கருவேப்பிலை இவற்றைவைத்து லேசாக தட்டவும்.
இந்த மசாலாவை கடலை மாவில் பொட்டு , நறுக்கிய முந்திரி பருப்பையும் சேர்த்து நெய்யை சூடாக்கி ஊற்றி பிரட்டவும்.
பின் சிறிது தண்ணீர் தெளித்து லேசாக உதிர்த்துக்கொள்ளவும். பின் இந்த உதிர்த்த மாவை எண்ணெய்யை சூடாக்கி பொறித்து எடுக்கவும்.