ஈஸி போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு

பன்னீர் - 1/2 கப்

உருளைக்கிழங்கு (வேக வைத்து மசித்தது) - 1/2 கப்

தேங்காய் துருவல் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை இலை - சிறிது

கொத்தமல்லி இலை - சிறிது

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வேகவைத்த உருளை, பன்னீர், தேங்காய் துருவல், உப்பு, பொடியாக நறுக்கிய மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து வைக்கவும்.

பஜ்ஜி போண்டா மிக்ஸை தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

உருளை பன்னீர் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டவும்.

உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போடவும்.

திருப்பி போட்டு எல்லா பக்கமும் ஒன்று போல் சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: