ஈசி உளுந்து வடை
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கப்
பெருங்காயம் - சிறிதளவு
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கப்
கொத்தமல்லித்தழை - 1/2 கப்
கறிவேப்பிலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
அரிசி மாவு - 1 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 6
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம் பருப்பை ஊற வைத்து கிரைண்டரில் லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் பதமாக அரைத்துக் கொள்ளவும்.
பின் அரைத்த மாவை பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அதனுடன் உப்பு, பெருங்காயம், வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், அரிசி மாவு, சீரகம், மிளகு சேர்த்து கைகளால் நன்கு பிசையவும்.
பின் எண்ணெய் காய வைத்து மாவில் சிறிதளவு ஸ்பூனால் எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.