இலை பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைமாவு - 2 கப்

மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி

எள் - ஒரு தேக்கரண்டி

நெய் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலைமாவு, எள், மிளகாய்த்தூள் இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசையவும்.

தேவையெனில் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் இலை பக்கோடா அச்சில் மாவினை எடுத்துக் கொண்டு நேரடியாகவே எண்ணெய்யில் பிழிந்து விடவும்.

வெந்ததும் எடுத்து ஒரு செய்தித்தாளை போட்டு எண்ணெய் வடிந்த பின்பு வேறு பாத்திரத்திற்கு வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: