இலங்கை கடலை வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - ஒரு சுண்டு

பெருஞ்சீரகம் - 1 அல்லது 2 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1

பச்சைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 4

கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - சிறிதளவு

பூண்டு (நசுக்கியது) - 2 பல்

இஞ்சி (நசுக்கியது) - சிறியதுண்டு

கொதிதண்ணீர் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு அதன் மேல் ஒரளவு கொதித்த நீரை (நகச்சூடு)விடவும் (கடலைப் பருப்பை விட தண்ணீர் கூடுதலாக இருக்கவேண்டும்).

பின்பு அதை( 1 - 2)மணி நேரம் ஊறவிடவும். கடலைப்பருப்பு ஊறிய பின்பு கடலைப்பருப்பில் உள்ள தண்ணீரை வடித்து விடவும்.

தண்ணீர் வடித்து விட்ட பின்புகடலைப்பருப்பை எடுத்து மூன்றாக பிரித்து மூன்று பாத்திரத்தில் போடவும்(முதலாவது பாத்திரத்தில் கொஞ்சமாகவும், இரண்டாவது மூன்றாவது ஆகிய பாத்திரங்களில் முதலாவதின் இரண்டு மடங்காகவும்).

இரண்டாவது பாத்திரத்தில் உள்ள கடலைப்பருப்பை எடுத்து அதனை கிரைண்டரில் (மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும் (நன்றாக அரைக்ககூடாது) (அதிகளவு தண்ணீர் சேர்க்ககூடாது).

அரைத்த கடலைப்பருப்பை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். அதன் பின்பு மூன்றாவது பாத்திரத்தில் உள்ள கடலைப் பருப்பை எடுத்து அதனை கிரைண்டரில்(மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்)(தடிப்பான பசை போல).

பின்பு அதனுடன் உப்பைசேர்த்து அரைக்கவும் சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக கலக்காது).

அதன் பின்பு மூன்றாவதாக அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் போடவும். பின்பு மூன்றாவதாக அரைத்த கடலைப்பருப்பு உள்ள பாத்திரத்தில் அதனுடன் இரண்டாவதாக அரைத்த கடலை பருப்பை போட்டு நன்றாக கலக்கவும்.

கலந்த பின்பு அதனுடன் முதலாவதாக எடுத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பை போட்டு நன்றாக கலக்கவும்.

இவையாவற்றையும் நன்றாக கலந்தபின்பு இதனுடன் சிறியசிறிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, நசுக்கிய இஞ்சி, பெருஞ்சீரகம், கடுகு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

கலந்தபின்பு அடுப்பில்தாட்சியை(வாணலியை)வைத்து அதில் அரைவாசிக்கு எண்ணெய்விட்டு நன்றாக கொதிக்கவிடவும்.

அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கையில் எடுத்து அதை ஓரளவு உருண்டையாக்கி அதை கையின் நடுப்பகுதியில் வைத்து ஓரளவு தட்டவும்.

கொதித்த எண்ணெயில் செய்த வடையை போடவும் இதே போல் கொஞ்ச வடைகளை செய்து போட்டு ஓரளவு மஞ்சள் நிறமாக பொரிக்கவும்.

பொரிந்த வடைகளில் உள்ள எண்ணெயை வடித்து விட்டு அதை சூட்டுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் மூடிவைக்கவும் (வடையின் உட்பகுதி நன்றாக அவிவதற்காக அப்படி செய்யாவிட்டால் வடையின் உட்பகுதி நன்றாக அவியாது).

அதன் பின்பு அதை எடுத்து திரும்பவும் கொதித்த எண்ணெயில் போட்டு நல்ல பொன்னிறமாக பொரிக்கவும்.

அதன் பின்பு வடைகளில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: