இறைச்சி வடை
0
தேவையான பொருட்கள்:
அரைத்த இறைச்சி - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 75 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பூண்டுபற்கள் - 10
பச்சை மிளகாய் - 10
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி இலை - சிறிது
முட்டை - 1
கடலை மாவு - 25 கிராம்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோலுரித்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி இலை, மிளகாய் யாவற்றையும் சுத்தம் செய்து மிக்சியில் போட்டு பொருமலாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்தவற்றை இட்டு அத்துடன் அரைத்த இறைச்சி உப்பு, முட்டை, கடலை மாவு எல்லாவற்றையும்,போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் பிசைந்த மசாலாவை வட்டமாகவோ, முட்டை வடிவிலோ தட்டிப் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்..