இறால் வடை (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 15

கடலை பருப்பு (ஊறவைத்தது) - 1/4 கப்

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு கொத்து

இஞ்சி, பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி

கார்ன் ஃப்ளார் மாவு - 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஊறவைத்த கடலைப்பருப்பு தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

பிறகு இறால் தவிர மேற்கண்ட எல்லாவற்றையும் மிக்ஸியில் பருப்புடன் போட்டு மையாக அரையாமல் ஒன்றிரண்டாக இருக்குமாறு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய இறாலை சேர்த்து கலக்கவும். இதனை வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: