இறால் வடை (1)
தேவையான பொருட்கள்:
இறாலில் வரட்டி கொள்ள (1):
இறால் - 10
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 3/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
இறாலில் வரட்டி கொள்ள (2):
கொத்தமல்லி தழை - சிறிது
பச்சைமிளகாய் - 1
தேங்காய் - இரண்டு பத்தை
வெங்காயம் - 1
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
முட்டை - ஒன்றில் பாதி அளவு
உப்பு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
இறாலில் வரட்டிக் கொள்ள வேண்டிய தேவையான பொருட்கள் ஒன்றில் உள்ள அயிட்டங்களை வரட்டி (சுருட்டி) கொள்ள வேண்டும்.
பிறகு தேவையான பொருட்கள் இரண்டில் உள்ள பொருட்களையும் சேர்த்து வரட்டி ஆற வைக்கவும்.
மிக்சியில் முதலில் பொட்டுக்கடலையை போட்டு பொடித்து தனியாக எடுத்து வைக்கவும். பிறகு அதில் ஆறிய வரட்டி வைத்துள்ள இறால் கலவையை சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். பிறகு மிக்சியின் ஓரத்தில் ஒட்டி கொண்டுள்ளவைகளை கத்தியால் கிளறி விட்டு கொஞ்சமாக தண்ணீர் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து எடுக்கவும்.
அரைத்த கலவையில் முட்டை சேர்த்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.