இன்ஸ்டண்ட் காராசேவு
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1/2 கிலோ
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் (அல்லது) மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயப்பவுடர் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைமாவை சலித்துக் கொண்டு அதில் அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
சீரகம், உப்பு, பெருங்காயப்பவுடர், மிளகுத்தூள் (அல்லது மிளகாய்த்தூள்) சேர்த்து, தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவுக்கு பிசைவது போல் பிசையவும்.
வாணலியில் எண்னெய் ஊற்றி, 5 நிமிடம் போல வைத்திருந்து, எண்ணெய் காய்ந்ததும் மாவை தேன்குழல் முறுக்கு அச்சில் போட்டு நேரடியாக எண்ணெயில் பிழிந்து, ஒரு நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு மேலும் ஒரு நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்.
ஆறிய பிறகு உடைத்து விடவும். இதேபோல் அனைத்தையும் செய்து முடிக்கவும்.