இனிப்பு வடை
தேவையான பொருட்கள்:
மைதா - 1/2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
வெல்லம் - 1 கப்
சோடாமாவு - 2 சிட்டிகை
பால் (காய்ச்சி ஆறவைத்தது) - 1/2 கப்
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் (நசுக்கியது) - 3 என்னம்
சுக்கு (நசுக்கியது) - சிறிய அளவு
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெல்லத்தை துருவி தண்ணீர் தெளித்து ஏலக்காய்,சுக்கு சேர்த்து சூடாகும் வரை காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.
மூன்று மாவுடன் சோடாமாவையும் சேர்த்து சலிக்கவும். இது மூன்றையும் ஒன்றாக கலக்க உதவும்.
இப்பொழுது மாவுக்கலவையுடன் உப்பு,சர்க்கரை, வெல்லப்பாகு, பால் சேர்த்து பிசையவும்.
கெட்டியாக இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தைவிட கெட்டியாக கலக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணைய் காயவைத்து மாவை போண்டாவிற்கு போடுவது போல் போட்டு வடைகளாக சுட்டு எடுத்து பரிமாறவும்.