ஆலு போண்டா
தேவையான பொருட்கள்:
ஸ்டஃபிங் செய்ய:
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
பின்ஸ் - 50 கிராம்
காரட் - 50 கிராம்
கொத்தமல்லி இலை (பொடிதாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி
புதினா இலை - 5
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி அல்லது 4 மிளகாய்
உப்பு - தேவையான அளவு
போண்டா மாவு:
கடலை மாவு - 1கப்
மைதா மாவு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் காரட்டினை நன்றாக வேகவைத்து மசித்து கொள்ளவும். (மசித்த பிறகு தண்ணீர் இல்லாமால் பார்த்து கொள்ளவும்.)
மசித்து வைத்துள்ள காய்களுடன் கொத்தமல்லி, புதினா இலை, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
இதனை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயினை காய வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து 2 கப் தண்ணீருடன் நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து போண்டா மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான ஆலு போண்டா ரெடி.