ஆமை வடை (1)
0
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு (ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்) - 3/4 கப்
பட்டாணி பருப்பு (ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்) - 2 கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 4 என்னம்
சீரகம் -1 1/2 தேக்கரண்டி
பச்சரிசி - 1 தேக்கரண்டி
சோடாமாவு - 3 சிட்டிகை
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஊறவைத்த பருப்புகளில் கொஞ்சத்தை எடுத்து வைத்து, மீதி உள்ளவைகளை கொரகொரப்பாக அரைக்கவும்.
பின் வெங்காயம்,பச்சைமிளகாய், சீரகம், உப்பு, சோடாமாவு இவற்றை கலந்து பச்சரிசி மாவு போட்டு நன்கு பிசைந்து வாணலியில் காயும் எண்ணையில் தட்டி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.