ஆப்பில் பஜ்ஜி(1)
0
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 1
கடலை மாவு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிள்காய் தூள் - 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா - ஒன் பின்ச்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 தேக்கரண்டி அல்லது பெருங்காயம் ஒரு பின்ச்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஆப்பிளை மெல்லிய துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கி விதையை எடுத்து விட வேண்டும்.
கடலை மாவுடன் மிளகாய் தூள், உப்பு, ஆப்ப சோடா, இஞ்சி பூண்டு பேஸ்ட் (அல்லது) பெருங்காயம், சூடான எண்ணெய் ஒரு தேக்கரண்டி கலந்து தயிர் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
எண்ணெயை காய வைத்து ஆப்பிள் ஸ்லைஸ்களை மாவில் தோய்த்து போட்டு நன்கு வேக விட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.