ஆனியன் போண்டா
0
தேவையான பொருட்கள்:
பஜ்ஜி போண்டா மிக்ஸ் - 1 கப்
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2
கொத்தமல்லி இலை (பொடிதாக நறுக்கியது) - 1/2 கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லி தழை, போண்டா மிக்ஸ் இவைகளை தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஸ்பூனால் மாவை எடுத்து எண்ணெயில் விடவும். வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
மிக்ஸ் இல்லாவிடில் கடலைமாவு, அரிசிமாவு 2:1 என்ற விகிதத்தில் எடுத்து அரை தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து கரைக்கவும்.
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.