ஆனியன் பக்கோடா (3)
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு துண்டு
மல்லித் தழை - கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நீளமாகவும், மெல்லியதாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
பின் மேலே கூறிய பொருட்களை வெங்காயத்தில் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
சிறிது எண்ணெய் ஊற்றி பிரட்டிக் கொள்ளவும். நன்றாக கலக்கி 5 நிமிடம் கழித்து மீண்டும் பிரட்டி எடுக்கவும்.
பின் சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரிக்கவும்.
குறிப்புகள்:
கடலை மாவில் தண்ணீர் ஊற்றி பின் வெங்காயத்தை போட்டு தான் கலக்கி செய்வோம். ஆனால் இந்த முறையில் தண்ணீரே பயன்படுத்தக் கூடாது. நன்கு ட்ரையாக கலந்து சிறிது எண்ணெய் மட்டும் சேர்க்க வேண்டும்.
வெங்காயத்தில் இருக்கும் நீரும், எண்ணெயுமே மாவு நன்கு ஒட்ட போதுமானதாக இருக்கும்.
நன்கு உதிரியாக பொரித்து எடுக்கும் போது வெங்காயம் நன்கு பொரிந்து கடையில் கிடைப்பதை விட சுவையாக இருக்கும். மாவும் அதிகம் சேர்க்க தேவையில்லை. எண்ணெயும் அதிகம் இழுக்காது.