ஆனியன் பக்கோடா (2)
0
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் -2
கடலைமாவு -1/2 கப்
சமயல்சோடா -1 சிட்டிகை
மிளகாய்தூள் - காரத்திற்கு ஏற்ப
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக பொடியாக நறுக்கவும்.கறிவேப்பிலை பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,சமயல்சோடா,உப்பு,மிளகாய்தூள் சேர்த்து சிறிது தண்ணிர் தெளித்து பிசையவும்.பிசைந்தமாவுடன் நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை போட்டு நன்கு பிரட்டவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பிரட்டிய வெங்காயத்தை உதிரியாக போட்டு வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.