ஆனியன் பக்கோடா
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி, கறிவேப்பில்லை (பொடிதாக நறுக்கியது) - 1/4 கப்
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறிய துண்டு
பட்டர் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பூண்டினை நசுக்கி வைக்கவும்.
பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அத்துடன் வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி கறிவேப்பில்லையுடன் பெருங்காயம் மற்றும் பட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். (விரும்பினால் சிறிது பேக்கிங் பவுடர் சேர்த்து கொள்ளலாம்)
வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து அதில் சிறிது சிறிதாக இதனை கிள்ளி போட்டு பொரிக்கவும்.