அவல் வடை (3)
0
தேவையான பொருட்கள்:
கெட்டி அவல் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 2
பச்சைமிளகாய் - 4
கறிவேப்பிலை - 5
கொத்தமல்லி - சிறிது
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1/2 (பாதி)
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவலை கழுவி, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் ஊற வைத்து பிழிந்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து, மசித்து வைக்கவும்.
வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
பிழிந்து வைத்துள்ள அவலுடன், உருளைக்கிழங்கு, நறுக்கி வைத்துள்ளவற்றை உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து பிசைந்து சிறுவடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.