அவல் வடை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கெட்டி அவல் - 200 கிராம்

கடலை பருப்பு - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 5

சோம்பு - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 6 பல்

இஞ்சி - 1 துண்டு

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின், இஞ்சி, பூண்டு, சோம்பு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, வடைக்கு அரைப்பது போல் கரகரப்பாக அரைக்கவும்.

அவலை கழுவி, தண்ணீரை பிழிந்து, அரைத்த மாவுடன் சேர்க்கவும்.

வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி, அரைத்த மாவுடன் சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் மாவை வடைகளாக தட்டி, பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: