அவல் வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

கடலை மாவு - 2 மேசைக்கரண்டி

வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1/2 கப்

பச்சை மிளகாய் - 4

சீரகம் - 1 தேக்கரண்டி

இஞ்சி - 1/2 அங்குலம் அளவு

சோடா மாவு - 1 சிட்டிகை அளவு

கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - 1 இனுக்கு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவலை வெறும் வாணலியில் 1 நிமிடம் வறுத்து பின் மிக்ஸியில் ஒரு சுத்து மட்டும் சுத்தி எடுக்கவும்.

தண்ணீர் விட்டு தூசியை நீக்கி 2 மணிநேரம் ஊறவிடவும்.

பின் தண்ணீரை வடிக்கவும்.

பச்சைமிளகாய்,சீரகம்,இஞ்சியை கரகரப்பாக மிக்ஸியில் அரைக்கவும்.

அதை அவலுடன் சேர்க்கவும்.

மீதியுள்ள அனைத்து பொருட்களுடன் உப்பு சேர்த்து வடை மாவிற்கு பிசையவும்.

பின் வாணலியில் எண்ணையை காயவைத்து வடையை போட்டு பொன்னிறமாக எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: