அவல் முறுக்கு
0
தேவையான பொருட்கள்:
பொடித்த அவல் - 1 கப்
பயத்தமாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1 கப்
மிளகு பொடி - 1/2 தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - 1/2 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எல்லாமாவையும், உப்பு,பெருங்காயப்பொடி, மிளகுப்பொடி நெய் சேர்த்து நன்கு பிசைந்து சிறிது ,சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவாகப்பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி, முறுக்கு அச்சில் மாவைப்போட்டு முருக்குகளாகப்பிழியவும். நன்கு சிவந்து மொறு, மொறுப்பாக வெந்ததும் பொரித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
அரை லிட்டர் எண்ணெய்க்கு, ஒரே நேரத்தில் 3-4 முறுக்குகள் வரை பிழிந்து விடலாம்.