அல்சந்தர் வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காராமணி அல்லது தட்டைப்பயிறு - 1 கப்

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையானவற்றை தயாராக வைக்கவும். இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

காராமணி அல்லது தட்டைப்பயிறு முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.

ஊறிய பயிறை மிக்ஸியில் நீர் சேர்க்காமல் அரைக்கவும். கடைசியில் மஞ்சள் தூள், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி தனியாக எடுத்து வைக்கவும்.

அரைத்து வைத்திருக்கும் மாவின் பதம், கடலை வடை போல் இருக்க வேண்டும்.

கையிலோ அல்லது பால் கவரிலோ எண்ணெய் தடவி வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: