அரிசி வடை (1)
தேவையான பொருட்கள்:
புழுங்கரிசி - 1 கோப்பை
தேங்காய் துருவியது - 1 கோப்பை
புளித்த தயிர் - 1 கோப்பை
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
சிவப்புமிளகாய் - 2
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும் பருப்பையும் களைந்து தயிரில் கலந்து சுமார் ஆறு மணிநேரம் ஊற வைக்கவும். அதை அப்படியே மிக்சியில் போட்டு அரைக்கவும். உப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவல் மற்றும் மிளகாய்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் நைசாக அரைக்கவும்.
தேவையானால் தயிரி சிறிது தெளித்துக் கொள்ளலாம். நீர் ஊற்றக்கூடாது.
கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாய் நறுக்கி அரைத்த மாவில் கலக்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், மாவினை சிறிய, கனமில்லாத வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.