அரிசி வடை
0
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கை
பூண்டு - 1 முழுசு
மிளகாய் வற்றல் - 6
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, பருப்பை 4 மணி நேரம் ஊர வைக்கவும். இதில் மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து கெட்டியாக வடை தட்டும் பதத்தில் ஆட்டிக்கொள்ளவும்.
பின் பூரி பதத்திர்க்கு கையால் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.