அரிசி முறுக்கு (1)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 3 கப்

வெண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 கப்

சீரகம் அல்லது எள் - 1/2 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை ஊற வைத்து உரலில் இடித்து கப்பியில்லாமல் நைஸாக சலித்துக் கொள்ளவும்.

உளுத்தம்பருப்பை லேசாக வறுத்து திரித்துக் கொள்ளவும்.

சீரகத்தை அல்லது எள்ளை ஒன்றிரண்டாகப் பொடித்து மாவுகளுடன் கலந்து கொள்ளவும்.

உப்பை சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து மாவில் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கையில் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு முறுக்கு குழலில் 3 துவாரமுள்ள அச்சைப் போட்டு மாவைக் குழலினுள் வைத்து எண்ணெயில் சிறு சிறு வட்டங்களாகப் பிழியவும்.

இரு பக்கங்களும் நன்றாக வெந்து சத்தம் நின்றதும் கம்பியால் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

அரை லிட்டர் எண்ணெய்க்கு, ஒரே நேரத்தில் 3-4 முறுக்குகள் வரை பிழிந்து விடலாம்.