அரிசி முறுக்கு

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1/2 கப்

இட்லி அரிசி - 1/2 கப்

பொட்டுகடலை - 1/2 கப்

டால்டா - 50 கிராம்

ஜீரகம் - 1/2 தேக்கரண்டி

ஓமம் - 1 பின்ச்

பச்சை மிளகாய் - 2

கறுப்பு எள் - 3 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசிகளை ஊறவைக்கவும்.பொட்டுகடலையை பொடிக்கவும்

அரிசிகளையும்,பச்சைமிளகாயும் தண்ணீர் அதிகம் இல்லாமல் அரைத்து எடுக்கவும்..தண்ணீர் கூடினால் சரியாக வராது

அரைத்த அரிசியில் பொட்டுகடலை பொடி மற்றும் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து முருக்கு மாவு பதத்திற்கெடுக்கவும்

இனி முருக்கு பிடியில் மாவை இட்டு ஒரு பெரிய துணி விரித்தோ அல்லது சின்ன சின்ன கவரில் பிழிந்தோ வைக்கவும்

அதே சமயம் எண்ணையை காயவைத்து பிழியும் முறுக்கை காய்ந்து போகும் முன் எண்ணையில் பொரித்து பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

அரை லிட்டர் எண்ணெய்க்கு, ஒரே நேரத்தில் 3-4 முறுக்குகள் வரை பிழிந்து விடலாம்.