அப்பள பஜ்ஜி
0
தேவையான பொருட்கள்:
வட்ட அப்பளம் - 10
கடலை மாவு - 250 கிலோகிராம்
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
சிகப்பு கலர் பொடி - 1 பின்ச்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையன அளவு
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, சீரகம், மிளகாய் தூள், உப்பு, சிகப்பு கலர் அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அப்பளத்தை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும்.திருப்பி விட்டு வெந்த பின்பு எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
தேங்காய் சட்னி உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.