அப்பளப்பூ பஜ்ஜி
0
தேவையான பொருட்கள்:
அப்பளப்பூ - 10
கடலை மாவு -100 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
மிளகாய் பொடி - 1/4 தேக்கரண்டி
சிவப்பு கலர் பவுடர் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 லிட்டர்
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் பொடி, கலர் பவுடர், சமையல் சோடா, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
அப்பளப்பூ நான்காக ஒடித்துக் கொள்ளவும்.
அப்பளப்பூ துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குறிப்புகள்:
சட்னியுடன் சூடாக பரிமாறவும்.