அச்சு முறுக்கு
0
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1/4 கிலோ
சீனி - 150 கிராம்
முட்டை - 1
தேங்காய் - பாதி மூடி
கருப்பு எள் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.
மைதாமாவில் தேங்காய் பால், சீனி, முட்டை இவற்றை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக்கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்.
முறுக்கு சுடும் பதத்திற்க்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். எள் சேர்த்து நன்கு மாவை கலக்கி அச்சு முறுக்கு சுடும் அச்சை மாவில் முழுவதுமாக முக்காமல் பாதி அச்சுவரைக்கும் முக்கி எண்ணெய்யை சூடாக்கி பொரித்து பொரித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
அரை லிட்டர் எண்ணெய்க்கு, ஒரே நேரத்தில் 3-4 முறுக்குகள் வரை பிழிந்து விடலாம்.