sஃபெட்டுச்சினி உடன் தக்காளி ஸோஸ் (Fettuccini with Tomato Sauce)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

Fettuccini - 200g

தக்காளி - 2

வெட்டிய வெங்காயம் - 1/2 கப்

உள்ளி - 5 பல்லு

ஒலிவ் எண்ணெய் - 5 மேசைக்கரண்டி

தக்காளி கெச்சப் - 3 மேசைக்கரண்டி

ரெட் சில்லி ஸோஸ்/ரெட் சில்லி பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி

தண்ணீர் - 3 கப்

பார்மெஜான்/மோற்ஸரில்லா சீஸ் - 3/4கப்

பேசில் இலை - 5

இத்தாலியன் சீஸனிங் - 1 மேசைக்கரண்டி

(Oregano, Basil, Majoram, Thyme, Rosemary, Parsley கலவை)

சோள மா - 1 தேக்கரண்டி

உப்பு - உருசிக்கேற்ப

செய்முறை:

தண்ணீரை கொதிக்க வைத்து அதனுள் பாஸ்தாவை போட்டு அவிக்கவும்.

பாஸ்தா ஓரளவு அவிந்ததும் அதனுள் அரைவாசி ஒலிவ் எண்ணெய், உப்பு சேர்த்து கிளறி விடவும்.

பாஸ்தா நன்கு அவிந்ததும் வடித்து எடுத்து வைக்கவும். (வடித்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்)

தக்காளி, வெங்காயம் , உள்ளி என்பவற்றை கிரைண்டரில் போட்டு அடிக்கவும்.

பின்னர் பாஸ்தா வடித்த தண்ணீர், தக்காளி கலவை இரண்டையும் சேர்த்து அதனுள் மீதி ஒலிவ் எண்ணெய், உப்பு, சில்லி பேஸ்ட் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கலவை ஓரளவு கொதித்ததும் அதனுள் சிறிது தண்ணீரில் கரைத்த சோள மாவினை போட்டு கிளறவும்.

கலவை ஓரளவு கெட்டியானதும் (அடுப்பின் தீயை குறைத்து விடவும்) அதனுள் அவித்த பாஸ்தா, அரைவாசி சீஸ், இத்தாலியன் சீஸனிங், தக்காளி கெச்சப் சேர்த்து கிளறவும்.

பாஸ்தா தயார். பின்னர் இதனை பரிமாறும் தட்டில் கொட்டி மீதி சீஸ், பொடியாக வெட்டிய பேசில் இலை என்பவற்றை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

இச் செய்முறையின்படி மற்றைய பாஸ்தாக்களையும் செய்யலாம். Whole Wheat பாஸ்தா சத்தானது.