Ziti பாஸ்தா
தேவையான பொருட்கள்:
Ziti பாஸ்தா - 2 கப்
தக்காளி/மரினாரா ஸோஸ் - 1 1/2 கப்
அல்பிரடோ ஸோஸ் - 3/4 கப்
பார்மஜான் சீஸ் - 1/2 கப்
பொன்டீனா(Fontina) சீஸ் - 1/2 கப்
மொற்சரில்லா சீஸ் - 1/2 கப்
மிளகுதூள்
உப்பு
காய்ந்த ஒரெகானோ - 1/2 தேக்கரண்டி
காய்ந்த பேஸில் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் பிளேக்ஸ் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
பாஸ்தாவை மூழ்கும்வரை தண்ணீர் விட்டு உப்பு போட்டு அவிக்கவும்.
பாஸ்தா வெந்ததும் வடிகட்டி எடுக்கவும்.
அவனை 375 F இல் முற்சூடு பண்ணவும்.
ஒரு பேக்கிங் தட்டிற்கு பேக்கிங் ஸ்பிறே அல்லது பட்டர் பூசி 1/2 கப் மரினாரா ஸோஸை போட்டு சீராக பரப்பவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் அல்பிரெடோ ஸோஸ், 1 கப் மரினாரா ஸோஸ், மிளகுதூள், உப்பு, அரைவாசி பார்மஜான், மொற்சரில்லா, பொன்டீனா சீஸ்கள், மிளகாய் பிளேக்ஸ், ஒரெகானோ மற்றும் பேசில் இலைகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் இதனுள் அவித்த பாஸ்தாவைப் போட்டு நன்கு கிளறவும்.
பின்னர் இந்த கலவையை மரினாரா ஸோஸ் தடவிய பேக்கிங் பானில் கொட்டி சீராக பரவி விடவும்.
பின்னர் இதன் மேல் மீதமுள்ள சீஸ்களை கலந்து தூவவும்.
பின்னர் முற்சூடு படுத்திய அவனில் 20 - 25 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகி பொங்கும் வரை விட்டு(மேற்புறம் சிறிது பிரவுண் நிறமாக மாறும் வரை) எடுக்கவும்.
சுவையான பாஸ்தா தயார். இதனை சிறிது ஆறவிட்டு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
குறிப்புகள்:
விரும்பினால் சீஸின் அளவை இன்னும் குறைக்கலாம்.
அல்பிரடோ ஸோஸ் :-
http://www.arusuvai.com/tamil/ii_i,http://www.arusuvai.com/tamil/iii_ii----------
தக்காளி/மரினாரா ஸோஸ் :-
http://www.arusuvai.com/tamil/iv