V8 பான சூப்
தேவையான பொருட்கள்:
V8 பானம் - 2 சிறிய கான் (2 Small cans)
வெட்டிய புரோக்லி(Broccoli) - 1/4 கப்
துருவிய கரட் - 1/4 கப்
உள்ளி - 5 பல்லு
புளி - சிறிய பாக்களவு
மிளகு தூள் - 1 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
சிறிய சீரகம் - 1 தேக்கரண்டி
சோள மா - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 நெட்டு
உப்பு
காராசேவு - 1/4 கப்
செய்முறை:
கறிவேப்பிலையை பொடியாக அரிந்து வைக்கவும்
புளியை கரைத்து வைக்கவும்.
சோள மாவை கரைத்து வைக்கவும்.
புரோக்லியை 4 நிமிடங்கள் தண்ணீர் சேர்க்காது மைக்ரோவேவ் செய்து வைக்கவும்.
உள்ளி, சிறிய சீரகத்தை உரலில் அல்லது கிரைண்டரில் போட்டு இடித்து/அரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் V8 பானம், புளிக்கரைசல், உள்ளி- சீரக விழுது, அவித்த புரோக்லி, கரட், மிளகு தூள், மல்லித்தூள், முக்கால் கப் தண்ணீர், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலந்து மூடி கொதிக்க விடவும்.
கலவை நன்கு கொதித்ததும் மூடியை திறந்து விடவும்.
பின்னர் சோள மாக்கரைசலை சேர்த்து 4 - 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
சுவையான சூப் தயார். இதனை இறக்கு சூப் கிண்னங்களில் விட்டு காராசேவு தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
காராசேவிற்கு பதிலாக 'Gold fish' குக்கீஸ், ஓமப்பொடி, மிக்சரும் பாவிக்கலாம்.