KFC மேக் அண்ட் சீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 6 கப்

மேக்கரோனி- 1 1/3 கப்

வெல்வீட்டா (Velveeta) சீஸ் - 1/2 கப்

செட்டர் (Cheddar) சீஸ் - 1/2 கப்

கொழுப்பு நீக்கப்படாத பால் - 2 tbsp

உப்பு - 1/4 tsp

செய்முறை:

தண்ணீரை பெரிய பாத்திரத்தில் ஊற்றி தீயை கூட்டி கொதிக்க வைக்கவேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும் மேக்கரோனி சேர்க்கவும்.

10-12 நிமிடம் வேகவைக்க வேண்டும். நடு நடுவே கிளற வேண்டும்.

இது வேகும் நேரத்தில் வேறு ஒரு பாத்திரத்தில் மிதமான தீயில் மற்ற பொருட்களை சேர்த்து கிளறவும்.

சீஸ் உருகி மாவு போல் ஆனவுடன் அடுப்பை அனைத்து விடவும்.

மேக்கரோனி வெந்ததும் தண்ணீரே இல்லாமல் வடிகட்டி எடுக்கவும்.

பிறகு பாத்திரத்தில் கொட்டி சீஸ் சாஸை இதில் கொட்டி கிளறவும்.

சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: