2 மினிட்ஸ் கேக்
தேவையான பொருட்கள்:
ஸெல்ப் ரெய்சிங் மாவு - 2 தேக்கரண்டி சர்க்கரை - 2 தேக்கரண்டி கோகோ பவுடர் - 2 தேக்கரண்டி வெஜிடபுள் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி பால் - ஒரு தேக்கரண்டி முட்டை - ஒன்று வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு காபி மஃக்கில் (mug ) மாவு
கோகோ பவுடர்
சர்க்கரையை சேர்த்து கலக்கி கொள்ளவும்.
பின் பால்
எண்ணெய்
முட்டையை சேர்க்கவும்.
அதை நன்றாக கட்டி இல்லாமல் அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.
மைக்ரோ வேவ் அவனில் 2 நிமிடம் வைக்கவும்.
சாக்கோ ஸ்பான்ஜ் கேக் ரெடி.
வெனிலா கேக் செய்ய கோகோ பவுடரை மட்டும் தவிர்த்து நான்கு தேக்கரண்டி மாவு சேர்த்து மேலே கூறிய மற்ற பொருட்களான பால்
3 தேக்கரண்டி சர்க்கரை
எண்ணெய்
முட்டை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
அதை நன்கு கட்டி இல்லாமல் அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.
அதே போல மைக்ரோ வேவ் அவனில் வைத்ததும்
2 நிமிடங்களில் மஃக்கின் பாதி உயரத்திற்கு மேல் நன்கு பொங்கி வரும். அவனை அணைத்ததும் உப்பியது இறங்கிவிடும்.
2 மினிட்ஸ் மஃக் கேக் ரெடி.
நன்கு ஆறியதும்
மஃக்கை கவிழ்த்தால் ஒட்டாமல் வெளியே வந்துவிடும். மிருதுவான ஸ்பான்ஜ் கேக் நினைத்த உடன் செய்துவிடலாம்.
துண்டுகளாக போட்டும் சாப்பிடலாம். அப்படியே மஃகில் ஸ்பூன் கொண்டு சாப்பிடலாம். மேலே பவுடர் சுகர் கொண்டு அலங்கரிக்கலாம். விப் கிரீம்களை மஃகின் மேல் போட்டும் பரிமாறலாம்.