ஹெல்தி ஆம்லெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 3

காளான் - 10

பாலக் - 1/2 cup

வெண்ணை - 1 tbsp

மிளகு தூள் - 1/2 tsp

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெண்ணை உருக்கி நறுக்கிய காளான் மற்றும் பாலக் சேர்த்து வதக்கவும்.

உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி முட்டையை உடைத்து ஊற்றவும்.

எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி அடை போல் தட்டி விடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.

குறிப்புகள்:

காளான் மற்றும் பாலக் சீக்கிரமே வெந்து விடும். அதிகம் வேகவைக்க வேண்டாம்.

காளானை தண்ணீர் விட்டு சுத்தம் செய்தால் ஒரு துணியிலோ டிசுவிலோ சுற்றி வைத்து அரைமணி நேரம் கழித்து அறிந்து சேர்க்கவும். இல்லை என்றால் தண்ணீர் விடும். காளானை கழுவாமல் ஒரு ஈர துணி கொண்டு துடைத்து விட்டும் உபயோகப்படுத்தலாம். குழந்தைகள் விரும்பி சாபிடுவர்.

பெரியவர்களுக்கு செய்யும் போது வெண்ணை இல்லாமல் ஆலிவ் எண்ணெய் மற்றும் வெள்ளை கருவில் செய்தால் கொலஸ்ட்ரால் பிரச்சனை இராது.