ஹும்மூஸ் (1)
0
தேவையான பொருட்கள்:
வேகவைத்த( ரெடிமேட்)கொண்டைக்கடலை - ஒரு கப்
பூண்டு - ஒரு பல்
வறுத்து அரைத்த எள்(தஹினா) - 4 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ஆலிவ் ஆயில் - கால் கப்
செய்முறை:
மிக்ஸியில் மேற்கண்ட எல்லா பொருட்களையும் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைக்கவும். வேண்டுமென்றால் சிறிது அதிகம் தண்ணீர் சேர்த்து அரைக்கலாம்.
மேலே செய்து வைத்த ஹும்மூஸை ஒரு பாத்திரத்தில் பரவலாக இட்டு அதன் மேல் ஆலிவ் ஆயிலை ஊற்றி பரிமாறவும்.
குறிப்புகள்:
அரபு நாடுகளில் ஸ்ப்ரெட் வகையாக இதனை அதிகமாக உபயோகிக்கிறார்கள். சிப்ஸ், குபூஸ், குப்பா போன்றவற்றிற்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் ஏதாவதொன்று குறைந்தாலும் சுவை குறைந்து விடும்.