ஹுனி ரோஷி (Huni Roshi)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. மைதா மாவு - 3/4 கப்

2. தேங்காய் துருவல் - 1/4 கப்

3. உப்பு

4. நீர்

5. எண்ணெய்

செய்முறை:

மைதா மாவுடன், தேங்காய் துருவல், உப்பு, எண்ணெய் சேர்த்து தேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி திரட்டி தோசை கல்லில் சுட்டு எடுக்கவும். (எண்ணெய் / நெய் விட கூடாது)

குறிப்புகள்:

திவேகி(மாலத்தீவின் மொழி)யில் ஹுனி என்றால் தேங்காய் துருவல். இது வழக்கமான ரோஷி அளவுக்கு மெல்லியதாக திரட்ட வராது. சற்று தடிப்பாகவே இருக்கும். ஆனால் தேங்காயின் சுவை நன்றாக இருக்கும். விரும்பினால் இதையும் பிசைய சற்று வெது வெதுப்பான நீரும் சேர்க்கலாம்.