ஹலுவிதா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்வீட்டண்டு கன்டண்ஸ்டு மில்க் - அரை டின் நீர் - அரை லிட்டர் கடல் பாசி - 10 கிராம் சர்க்கரை - 6 தேக்கரண்டி கலர் - ஒரு துளி வெனிலா எஸன்ஸ் - சில துளிகள் பாதாம் - சிறிது பொடித்தது (விரும்பினால்)

செய்முறை:

கடல் பாசியில் நீர் விட்டு அடுப்பில் வைத்து கரைக்கவும். கரைந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து கரைத்து வைக்கவும்.

கன்டண்ஸ்டு மில்க்கில் கலர் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின் வெனிலா எஸன்ஸ் சேர்த்து கலந்து வைக்கவும்.

இதில் கடல் பாசி கலவையை வடிகட்டி சேர்க்கவும்.

இந்த கலவையை அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் பாத்திரத்தில் ஊற்றி ஆற விடவும். லேசாக செட் ஆக துவங்கியதும் விரும்பினால் பொடித்த பாதாம் தூவி அழுத்தவும்.

ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து டைமண்ட் வடிவில் துண்டுகள் போட்டால் மாலத்தீவில் பிரபலமான

சுவையான ஹலுவிதா (Haluvidha) தயார்.

குறிப்புகள்: