ஹனி ஜிஞ்சர் சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. சிக்கன் துண்டுகள் - 1/4 கிலோ

2. லைட் சோய் சாஸ் - 1 மேஜைக்கரண்டி

3. தேன் - 3 மேகைக்கரண்டி

4. உப்பு

5. மிளகு தூள் - 1 தேக்கரண்டி

6. இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி

7. எள் - 1 தேக்கரண்டி

செய்முறை:

சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து வைக்கவும்.

பாத்திரத்தில் சோய் சாஸ், தேன், உப்பு, மிளகு தூள், இஞ்சி விழுது கலந்து கொள்ளவும்.

இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் 200C’ல் முற்சூடு செய்த அவனில் பேக்கிங் டிஷ்ஷில் சிக்கன் துண்டுகளை வைத்து மேரினேட் செய்த கலவையை ஊற்றி அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடி 20 நிமிடம் வரை அல்லது சிக்கன் வேகும் வரை பேக் செய்யவும்.

இடை இடையே 5 நிமிடத்துக்கு ஒரு முறை பிரட்டி விடவும்.

வெளியே எடுத்து வெறும் கடாயில் வறுத்த எள் தூவி பரிமாறவும்.

சுவையான ஹனி ஜிஞ்சர் சிக்கன் தயார்.

குறிப்புகள்:

இதில் கார்ன் மாவு பயன்படுத்தியும் செய்யலாம். ப்ரவுன் சர்க்கரை கிடைத்தால் அதுவும் 1 தேக்கரண்டி சேர்க்கலாம். இஞ்சி இல்லாமல் வெறும் ஹனி சிக்கனாகவும் செய்யலாம். செய்து முடித்து எடுத்த பின் இன்னும் நல்ல glaze கிடைக்க மீண்டும் தேன் மற்றும் சோய் சாஸ் கலவையில் பிரட்டலாம். இதற்கு எலும்பில்லாது சிக்கன் தூண்டுகள், சிக்கன் விங்க்ஸ், சிக்கன் ட்ரம்ஸ்டிக் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இங்கே கொடுத்திருப்பது மிக சுலபமான முறை.