ஸ்வீட் பிரட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரட் ஸ்லைஸ் - 5

நெய் - 150 கிராம்

பால்கோவா - 50 கிராம்

சீனி - கால் கிலோ

தண்ணீர் - அரை லிட்டர்

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

செய்முறை:

பிரட்டில் ஓரத்தை வெட்டிவிட்டு நெய்யில் பொரிக்கவும்.

சீனியை பாகு காய்ச்சவும் பொரித்ததை சீனி பாகில் போடவும் அதனுடன் பால்கோவாவை கலந்து விடவும். நன்கு ஊறியதும் குங்குமப்பூ மேலே தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதை சூடாகவும் சாப்பிடலாம் ஃபிரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.