ஸ்விஸ் ரோல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 60 கிராம் காரன் ஸ்டார்ச் - 60 கிராம் ஃபைன் க்ரானியுலெட் சர்க்கரை - 120 கிராம் முட்டை - 4 வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி விரும்பிய ஃபில்லிங் ஐசிங் சுகர் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

முட்டையை வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனியாக பிரிக்கவும். முட்டையின் நடுவே உடைத்து பாதி ஓட்டில் மஞ்சள் கருவை உடையாமல் வைத்துக் கொண்டு மறுபாதி ஓட்டிலுள்ள வெள்ளைக்கருவை பாத்திரத்தில் ஊற்றவும். மீண்டும் மஞ்சள் கரு இருக்கும் ஓட்டிலிருந்து கருவை பக்குவமாக மறுபாதியில் போட்டு

அதனடியில் தேங்கியிருக்கும் வெள்ளைக்கருவை மீண்டும் பாத்திரத்தில் ஊற்றவும். இப்படியே மஞ்சள் கருவை 2 பாதி ஒட்டினுள்ளும் மாற்றி மாற்றி உடையாமல் போட்டால்

வெள்ளைக்கருவை அழகாக முழுவதும் பிரித்து விடலாம். பிரித்த மஞ்சள் கருவில் பாதி சர்க்கரையை சேர்க்கவும்.

நன்றாக கைவிடாமல் அடித்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்து வெளிர் மஞ்சள் நிறம் (Pale Yellow Color) ஆனதும்

அதில் வெனிலா எசன்ஸை ஊற்றி கலக்கவும்.

தனியே எடுத்து வைத்த வெள்ளைக்கருவை நன்கு க்ரீம் பதத்தில் அடித்துக் கொண்டு

பின் மீதமுள்ள 60 கிராம் சர்க்கரையை கொட்டி நன்கு ஸ்பைக் உண்டாகும் அளவு அடிக்கவும்.

பின் வெள்ளைக்கரு ஃபோர்ம் இருக்கும் பாத்திரத்தை கவிழ்த்து பார்த்தால் கூட

அது கீழே ஒரு துளி நகராமல் நிற்கும். இது தான் பதம்.

வெள்ளைக்கருவை 2 பாகமாக பிரித்து மஞ்சள் கருவில் சேர்த்து மடித்தார் போல சுற்றிவிட்டு மெதுவாக கலக்கவும். (முதலில் மஞ்சள் கருவையும்

பின் வெள்ளைக்கருவையும் அடிக்கவும். மாற்றி செய்தால் வெள்ளைக்கருவின் ஸ்பைக் பதம் மாறிவிடும்). 2 வித மாவுகளையும் ஒன்றாகச் சலித்து முட்டை கலவையில் சேர்த்து பொறுமையாக கலக்கவும். பேக்கிங் ட்ரேயில் ஃபார்ச்மன்ட் பேப்பரை வைத்து பட்டர் தடவி

தயார் செய்துள்ள கலவையை ஊற்றி 375 F / 200 c க்கு முற்சூடு செய்த அவனில் வைத்து பேக் செய்யவும். சரியாக 10 நிமிடம் கழித்து (அ) பொன்னிறமானதும் எடுக்கவும். கேக்கில் மாய்ச்சர் போகாமலிருக்க பிளாஸ்டிக் கவரால் மூடி வைக்கவும்.

செமி ஸ்வீட் சாக்லேட்டை எடுத்துக் கொள்ளவும்.

மைக்ரோவேவ் அவனில் 5 நிமிடம் வைத்து உருக்கிக் கொள்ளவும்.

உருக்கிய சாக்லேட்டை கேக்கின் மேற்பரப்பில் சீராக தடவவும்.

கேக்கின் ஓரங்களை வெட்டிவிட்டு சுருட்டவும். ஓரங்கள் க்ரிஸ்பியாக இருப்பதால் சரியாக சுருட்ட முடியாது. ரோல் செய்த பின்பு கேக் பிரிந்து வராத அளவிற்கு ஒவ்வொரு சுற்று முடியும் போதும்

சற்று நிறுத்தி சரிசெய்து அடுத்த சுற்றை தொடங்கவும். ( சில சமயம் கிரீம் பிடித்துக் கொள்ளாமல் பிரிந்து வரப் பார்க்கும். எனவே நன்கு செட் ஆகும்படி சுற்றவும்).

அழகான ஸ்விஸ் ரோல் ரெடி.

ஐசிங் சுகரை எடுத்துக் கொண்டு அரை தேக்கரண்டி தண்ணீர் விட்டு நன்கு கலக்கினால்

வடித்த சாத கஞ்சி போல ஆகும். அதை ரோலின் மேலே குறுக்காக வேண்டிய டிசைனில் ஊற்றவும். பின் அது காய்ந்து பிடித்துக் கொள்ளும்.

பின் ஐசிங் சுகர் கொண்டு டஸ்ட் செய்து வெட்டவும்.

அருமையான

சூப்பர் சாஃப்ட் ஸ்விஸ் ரோல் ரெடி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிம்பிள் டெசர்ட்.

குறிப்புகள்: