ஸ்பைனாச் சூப்
தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை - ஒரு பெரிய கட்டு
தக்காளி - நான்கு
தக்காளி பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
ஸூக்கினி - இரண்டு
உருளைக்கிழங்கு - இரண்டு
பூண்டு - இரண்டு பற்கள்
பிரிஞ்சி இலை - இரண்டு
வெஜிடபிள் ஸ்டாக் - நான்கு கோப்பை
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி
பார்மஜான் சீஸ் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:
கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மற்ற எல்லாக்காய்களையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பூண்டை நசுக்கி வைக்கவும். தக்காளியை வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி வெங்காயத்தைப் போடவும் தொடர்ந்து ஸூக்கினியைப் போட்டு இரண்டையும் நன்கு வதக்கவும்.
பிறகு பிரிஞ்சி இலை, பூண்டு, தக்காளி, தக்காளி பேஸ்ட் மற்றும் கிழங்கைப் போட்டு வதக்கி தொடந்து வெஜிடபிள் ஸ்டாக்கை ஊற்றி நன்கு கலக்கி கொதிக்கவிடவும்.
ஐந்து நிமிடம் கொதித்த பிறகு நறுக்கி வைத்துள்ள கீரையைப் போட்டு கலக்கி உப்பை பதம் பார்த்து தேவைப்பட்டால் அரைத்தேக்கரண்டி சேர்க்கவும். மிளகுத்தூளை போட்டு நன்கு கலக்கி விடவும்.
சூப் நன்கு வெந்து கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பரிமாறும் பொழுது சீஸை தூவி சூடாக பரிமாறவும்.