ஸ்பைசி கார்ன்
தேவையான பொருட்கள்:
மக்காச்சோளம் - 4 உப்பு சேர்த்த வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி சீரகத் தூள் - அரை தேக்கரண்டி மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி உப்புத் தூள் - 2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
தேவையான பொருட்களைத் தயாராக வைக்கவும். மக்காச்சோளத்தை உரித்து சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மக்காச்சோளத்தைப் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி
உப்பு சேர்த்து வேகவிடவும். சோளம் நன்கு வெந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பேனில் எண்ணெயையும்
வெண்ணெயையும் போட்டு உருக்கவும்.
உருகியதும் அதில் தூள் வகைகளைப் போட்டு கலந்துவிட்டு இறக்கிவிடவும்.
பிறகு ஒரு சிறு ப்ரஷ் கொண்டு வெண்ணெய் சாஸைத் தொட்டு சோளத்தின் மீது பூசிவிடவும்.
டேஸ்டி ஸ்பைசி கார்ன் ரெடி. எலுமிச்சைச் சாறு தெளித்துப் பரிமாறவும்.